சென்னையில் பாதாள சாக்கடை பணியில் அலட்சியம்.. இரும்பு ராடு விழுந்து துடிதுடித்த 3 வயது குழந்தை.. ஷாக் சிசிடிவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புழல் அருகே காவாங்கரையில் பாதாள சாக்கடை பணியின் போது, ஜேசிபி எந்திரத்தில் கொண்டு வரப்பட்ட இரும்பு ராடு விழுந்து, அவ்வழியாக தந்தையுடன் வந்த 3 வயது குழந்தை மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான். பாதாள சாக்கடை ஊழியர்கள் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதாள சாக்கடை பணியினை மேற்கொண்ட ஒப்பந்த மேலாளர் முத்துக்குமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜேசிபி ஓட்டுநர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவன் படுகாயமடைந்த போது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதாகவும் குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை மீது இரும்பு ராடு விழும் சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Chennai Three Arrested After 3-Year-Old Dies in Iron Rod Accident During Drainage Work

பாதாள சாக்கடை அமைக்கும் பணி

சென்னை புழல் அருகே காவாங்கரையை கண்ணப்பசாமிநாத பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு அதில் ராட்சத கழிவுநீர் தொட்டி புதைக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக காண்டிராக்ட் முறையில் பணிகள் நடந்து வந்தது. அப்போது அங்கு ராட்சத இரும்பு ராடு ஒன்றை பொருத்தும் பணி நடந்து வந்தது. கிரேன் மூலமாக இரும்பு கம்பி பொருத்தும் பணி நடந்தது.

அப்போது விக்னேஷ் என்பவர் தனது 3 வயது மகன் ஷாருக் ஈஸ்வரனுடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். சாலையில் நடந்து வந்த நிலையில் கிரேனில் இருந்து இரும்பு கம்பி தூண் கீழே விழுந்தது. இதில் சாலையில் நடந்து வந்த ஷாருக் ஈஸ்வரன் படுகாயமடைந்தான். உடனே தந்தை மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிறுவன் உயிரிழப்பு

அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மாதபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது மருத்துவமனை முன்பு சிறுவனின் உறவினர்கள் குவிந்தனர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் மாதபுரம் எம்.எல்.ஏ விக்னேஷ் பிரபு பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாதாள சாக்கடை ஊழியர்கள் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக 3 பேரை கைது செய்தனர். பாதாள சாக்கடை பணியினை மேற்கொண்ட ஒப்பந்த மேலாளர் முத்துக்குமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜேசிபி ஓட்டுநர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் விசாரணை

சிறுவன் படுகாயமடைந்த போது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதாகவும் குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். முன்னதாக குழந்தை மீது இரும்பு ராடு விழும் சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+