பெனாசிருக்கு அயர்லாந்து அமைதி விருது
லண்டன்: பெனாசிர் பூட்டோவுக்கு அயர்லாந்து நாட்டின் 2007ம் ஆண்டுக்கான டிப்பரேரி அமைதி விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை நிலைநாட்ட பாடுபட்டதற்காகவும், நாட்டில் மீண்டும் ஜனநாயகம் தழைத்தோங்க பாடுபட்டதற்காகவும் பெனாசிர் பூட்டோவுக்கு அமைதிக்கான இந்த விருது மரணத்திற்குப் பின்பு வழங்கப்படுவதாக விருது அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விருதினை அயர்லாந்தின் டிப்பரேரி அமைதி விருதுக் கழகம் வழங்குகிறது. ஏப்ரல் மாதம் இந்த விருது வழங்கப்படும். பெனாசிர் குடும்பத்தைச் சேர்ந்த பிரதிநிதியிடம் விருது அளிக்கப்படும்.
இதுகுறித்து விருதுக்கான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்டின் க்யுன் கூறுகையில், பூட்டோ மிகவும் துணிச்சலானவர், தைரியமானவர். அசாத்திய திறமை படைத்தவர்.
தேர்தலை சந்திக்க, தனது கட்சிக்குத் தலைமை தாங்க அவர் மீண்டும் தாயகம் திரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்று தெரிவித்தார்.
இந்த விருதுக்காக ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, வடக்கு அயர்லாந்தின் முதல் அமைச்சர் இயான்பெய்ஸ்லி, முன்னாள் நோபல் பரிசாளர் ஷிரின் இபாடி, இந்திய ஆன்மீகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
1984ம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. உலக அளவில் அமைதிக்காக பாடுபடுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதினை தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, முன்னாள் சோவியத் தலைவர் கோர்பசேவ், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி ஆகியோர் பெற்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications