வைஷ்ணவா கல்லூரியில் வெடிகுண்டு புரளி
சென்னை: சென்னையில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் இன்று வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, அரும்பாக்கத்தில் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி உள்ளது. இன்று காலையில் அந்த கல்லூரிக்குள் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
பேசிய மர்ம நபர் கல்லூரிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டான்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து கல்லூரி மற்றும் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கடைசியில் வெறும் புரளி என தெரிய வந்தது.
இந்த வெடிகுண்டு புரளியால் வைஷ்ணவா கல்லூரிக்கும், பள்ளிக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
லேடி ஆண்டாள் பள்ளிக்கும்....:
இதேபோல, சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு தொலைபேசியில் பேசிய ஒரு மர்ம நபர், பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து பள்ளிக் கூடம் முழுவதும் சோதனை போட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது புரளி எனத் தெரிய வந்தது.
இந்த வெடிகுண்டு புரளியால் பள்ளியில் பரபரப்பு நிலவியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications