இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்:கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை பொதுக்குழு கூட்டம் காட்டு மன்னார்குடியில் மாவட்ட தலைவர் அப்துல் மாலிக் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் அனைவரையும் அப்துல் மாலிக் வரவேற்றார். ஷபிகுர் ரஹ்மான், மாநில சட்ட உதவி செயலாளர் காயல் மகபூப், பதிப்பக பொருப்பாளர் அபுபக்கர், கவுன்சிலர் அப்துல்மாலிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடலூர் மாவட்ட தலைவராக அப்துல்கபாரும், மாவட்டச் செயலாளராக சுக்கூர், பொருளாளராக ஹபிபுர் ரகுமான், துணைத் தலைவர்களாக முகம்மது, அப்துல் ரகுமான், முகம்மது கமாலுதீன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்ட துணைச் செயலாளர்களாக ராஜா ரஹீமுல்லா, லியாகத் அலி, அமானுல்லா,ஜக்கிரியா பாய் ஆகியோரும், மாவட்ட அமைப்பு செயலாளராக அப்துல் மாலிக், இளைஞரணி அமைப்பாளராக முகம்மது முஸ்தபா, மாணவர் பேரவை அமைப்பாளராக அஷ்ரப் அலி, வக்கீல் அணி அமைப்பாளராக ரகுமான், மார்க்க அணி அமைப்பாளராக அப்துல் ரஜாக், நூருல் அமின், விவசாயி அப்துல்காதர், வணிக அணி அமைப்பாளராக சையத் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+