தெரு நாய்கள் சண்டை: டென்ஷன் ஆன மதுரை கோவில் யானை!
மதுரை: தெரு நாய்களின் சண்டையால் பீதியடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை தாறுமாறாக ஓடியதால் பக்தர்கள் பீதியடைந்தனர். சுமார் ஒரு மணி நேர அட்டகாசத்திற்குப் பின்னர் யானை சகஜ நிலையை அடைந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்கிற 11 வயது யானை உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அம்மன், சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட விக்கிரகங்கள், வைகை நீரால்தான் தினசரி நீராட்டப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை பார்வதி யானை வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தது. தெற்கு கோபுரம் அருகே யானை வந்தபோது, தெருவில் சில நாய்கள் பயங்கர சப்தத்துடன் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்ததும் யானைக்கு பதட்டமாகி விட்டது. தும்பிக்கையை வேகமாக அங்கும் இங்கும் அசைத்தவாறு ஓடத் தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் பயந்து பதுங்கினர்.
வேகமாக ஓடிய யானை ஒரு ஹோட்டலுக்குள்ளும் புகுந்தது. இதனால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்தனர்.
பாகன் லட்சுமணன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி யானையை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். பின்னர் யானை கோவிலுக்குள் சென்றது. அதன் பிறகே பீதி தணிந்தது.
இதுகுறித்து கோவில் செயல் அதிகாரி ராஜா கூறுகையில், பயப்பட ஒன்றும் இல்லை. யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications