2007: தமிழகத்தில் 11,130 பேர் சாலை விபத்தில் மரணம்
சென்னை: 2007ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 11,130 பேர் இறந்துள்ளதாக புள்ளி விவர தகவல் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 54,553 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 11,130 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 6,409 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. இதில், 1,096 பேர் இறந்துள்ளனர்.
2007ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை நடந்த சாலை விபத்துகளில், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் வாகனம் ஓட்டியதாக 7,184 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாகவும், 4,969 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்கள் நிரந்தரமாகவும் நீக்கப்பட்டுள்ளன.
விபத்துகளுக்கு காரணமான 8,372 டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 727 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது.
இதே போல் 581 போக்குவரத்து கழகப் பேருந்துகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் வாகனம் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 10 முதல் 11 சதவீதம் அதிகரிப்பது தான் காரணம்.
தமிழகத்தில் உள்ள 97 லட்சம் வாகனங்களில் 76 லட்சத்துக்கு மேல் இருசக்கர வாகனங்கள் தான் இருக்கின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதே சமயம், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அவசர கால விபத்து மீட்பு மையங்கள் மூலம் 10 ஆயிரத்து 868 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications