நாமக்கல்லில் நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் அறிமுகம்!
நாமக்கல்: தமிழகத்திலேயே எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தாலுக்கா மருத்துவ மனைகள், நகராட்சிகள் என மொத்தம் 27 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இம் மையங்கள் மூலம் எச்.ஐ.வி. பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து இல்லாத மலைக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் பரிசோதனை மற்றும் ஆலோசனை மைய வசதியுடன் கூடிய வாகனத்துடன் நடமாடும் எச்.ஐ.வி. ஆய்வக வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் ஆலோசனைகள், பரிசோதனைக்கு என தனித்தனி அறைகள் உள்ளன. ஒரு கவுன்சிலரும் ஒரு ஆய்வுக் கூட நிபுணரும் இதில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் அரை மணி நேரத்தில் ரத்தப் பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டம் மலைகிராமங்கள் சார்ந்துள்ள ஏனைய மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவு செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications