அதிபர் தேர்தல்-அயோவா வாக்கெடுப்பில் ஹில்லாரி தோல்வி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் மாகாண வாக்கெடுப்பில் ஹில்லாரி கிளிண்டன் முதல் சுற்றில் தோல்வி அடைந்துள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவரான ஓபாமாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பிலும், குடியரசுக் கட்சி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு அனைத்து மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதில் அதிக வெற்றிகளை யார் பெறுகிறார்களோ அவர்களே அந்தந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அதாவது மக்கள் செல்வாக்கு உள்ளவர்களுக்கே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த மாகாண வாக்கெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. முதலில் அயோவா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹில்லாரி கிளிண்டன், கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஓபாமா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இதில் 36 சதவீத வாக்குகளைப் பெற்று ஓபாமா வெற்றி பெற்றார். ஹில்லாரிக்கு 3வது இடமே கிடைத்தது.
குடியரசுக் கட்சி சார்பில் ஆர்கன்சாஸ் மாகாணா முன்னாள் ஆளுநர் மைக் ஹக்கபி வெற்றி பெற்றார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ஹில்லாரிக்கு முதல் சுற்றிலேயே தோல்வி கிடைத்துள்ளது அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தத் தோல்வியால் ஹில்லாரியை ஜனநாயகக் கட்சி புறக்கணிக்கும் என்பதில்லை. முன்பு மாகாண அளவில் தோற்ற பில் கிளின்டனைத் தான் தேர்தலில் நிறுத்தி அந்தக் கட்சி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications