சேலம் அருகே வெறி நாய்கள் கடித்து 100 ஆடுகள் பலி
சேலம்: சேலம் அருகே வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 100 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. 50க்கும் மேற்பட்ட ஆடுகள் காயத்துடன் தப்பி ஓடி விட்டன.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன், பாண்டி. இருவரும் நூற்றுக்கணக்கான ஆடுகளுடன் ஊர் ஊராக சென்று ஆடுகளை விற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வந்த அவர்கள் பகலில் ஆடுகளை விற்று விட்டு தம்மம்பட்டி மலைப் பகுதியில் உள்ள பட்டியில் அடைத்தனர்.
இந்த நிலையில் இரவில் அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட வெறிநாய்கள், ஆட்டுப் பட்டிகளுக்குள் புகுந்து சரமாரியாக ஆடுகளை கடித்துக் குதறின.
இதில் 100 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 50க்கும் மேற்பட்ட ஆடுகள் காயத்துடன் நாய்களிடமிருந்து தப்பி ஓடி விட்டன.
ஆடுகளை வெறிநாய்களிடம் பறி கொடுத்த சோகத்தில் லட்சுமணன், பாண்டி குடும்பத்தார் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
அப்பகுதியில் வெறிநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் அவற்றைப் பிடிக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் குமுறுகின்றனர். இப்போது பரிதாபமாக 100 ஆடுகள் பலியாகி விட்டதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications