தமிழக கட்சிகள் எதிர்ப்பு: பிரதமரின் இலங்கை பயணம் ரத்து
டெல்லி: தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு வந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் 50வது ஆண்டு சுதந்திர தின விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இலங்கை அழைப்பு விடுத்திருந்தது. இதை பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் தமிழர்கள் மீது இலங்கை படைகள் பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ள நிலையில், அதற்கு அமெரிக்கா, ஐ.நா. சபை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்று கருத்து எழுந்தது.
மதிமுக, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட தமிழக கட்சிகளும் பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்று கோரிக்கை விடுத்தன.
இந்தப் பின்னணியில் தற்போது பிரதமரின் இலங்கை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட தினத்தில் பிரதமருக்கு தொடர் அலுவல்கள் இருப்பதால் இலங்கை பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதால் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications