மு.க.அழகிரி பிறந்த நாள்: 5000 பேருக்கு நல உதவிகள் வழங்க திட்டம்
மதுரை: மு.க.அழகிரியின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு 5,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மதுரை மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பாலராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. கோ.தளபதி, பொருளாளர் கண்ணன், துணைச் செயலாளர் அயூப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், ஜனவரி 30ம் தேதி மு.க.அழகிரியின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு 5,000 ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
அழகிரியின் பிறந்த நாள் விழாவை மாநாடு போல வெகு விமரிசையாக நடத்த வேண்டும்.
பொங்கல் திருநாளில் மதுரையில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, கிளைக் கழகங்களில் திமுக கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அழகிரியின் பிறந்த நாளையொட்டி நகரெங்கும் கட் அவுட்கள், பேனர்கள் வைக்கும் பணியில் அழகிரி ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications