சிறு வயது முதலே இசை பயில வேண்டும்: ராமதாஸ்
திருநெல்வேலி: இசையை குழந்தை பருவத்தில் இருந்தே காட்டாயமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நடந்த பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் நம்மாழ்வார் பாசுர ஆராதனை விழாவில் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
நான் மருத்துவம் பயின்று அரசியலுக்கு வந்த பின் தமிழ் பண்ணிசையை மீட்க வேண்டும் என்று எண்ணுவதற்கு காரணமாக இருந்தவர் மூத்த பத்திரிக்கையாளர் கண்ணன். நான் பெரிதும் போற்றுகின்ற இசை ஆய்வறிஞர் மம்முது சொன்னது போல் சங்க காலம் தொட்டு இன்று வரை தமிழிசைக்கு இடையிடையே தொய்வு ஏற்பட்டுள்ளது.
இசையை குழந்தை பருவத்தில் இருந்து கட்டாயமாக கற்று தர வேண்டும் என்று 5 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். இதற்கு ஆதரவும் கூடி வருகிறது. வடகொரியா, மலேசியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கூட இசை கட்டாய பாடமாக இருக்கிறது.
மன அழுத்தத்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு நோய்கள் வருவதாக கூறுகின்றனர். ஒருவன் இசையை பாடினாலோ, கேட்டாலோ சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் வராது. இசைக்கு தாவரங்கள் வளர்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள்.
நமது நாகஸ்வரம் அருமையான கருவி. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாநிலத்தில் 10, 15 இசைப்பள்ளிகள் இருந்தாலும், நலிவுடன் தான் இருக்கிறது. தமிழிசையை வளர்க்க நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்வோம்.
சென்ற ஆண்டு ராமனுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விழா எடுத்தோம். இங்கு இந்த மாவட்டத்தில் பிறந்த எல்லோருக்கும் விழா எடுக்க வேண்டும் என்று ஆசை. அதை பண்ணிசை தமிழ் மன்றம் நடத்தும்.
மழலை வகுப்பில் இருந்து இசையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பல முறை வைத்த கோரிக்கையை அரசுக்கு மீண்டும் வைக்கிறேன். காலையில் இயற்கை மழை நம்மை வாழ்த்தியது. மாலை வரை இசை மழையில் நனையுங்கள். தமிழ் மக்கள் வாழ்த்தை தவிர வேறு எந்த எதிர்பார்ப்போடும் இந்த விழாவை நடத்தவில்லை என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications