சென்னையில் நட்சத்திர ஹோட்டலின் ஆக்கிரமிப்பு பகுதி இடிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட நட்சத்திர ஹோட்டலின் ராட்சத செயற்கை நீருற்று இடித்துத் தள்ளப்பட்டது.
சென்னை, ஜெமினி மேம்பாலத்துக்கு கீழ் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தி பார்க் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. நகரில் பிரபலமாக இருக்கும் இந்த நட்சத்திர ஹோட்டலில் கார் பார்க்கிங், செயற்கை நீருற்று, ஜெனரேட்டர் ரூம் ஆகியவை அனைத்தும் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை.
இதுகுறித்து மாநகராட்சி மண்டல அதிகாரி பிரேம்நாத் கூறுகையில், மாநகராட்சி விதியின்படி எந்தவொரு கட்டடம் கட்டும்போதும் குறிப்பிட்ட பகுதியை திறந்தவெளி இடமாக ஒதுக்கி வைக்க வேண்டும். இதன்படி, குறிப்பிட்ட பகுதியை ஒதுக்காமல் நட்சத்திர ஓட்டல் கட்டப்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கார் பார்க்கிங், செயற்கை நீருற்று, ஜெனரேட்டர் ரூம் ஆகியவற்றை ஹோட்டல் நிர்வாகத்தினர் கட்டியுள்ளனர். திறந்தவெளி பகுதியாக இருக்க வேண்டிய இடத்தில் கட்டடம் கட்டினால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும் எனக் கூறினார்.
இந்நிலையில் இந்த ஹோட்டலின் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி அளக்கப்பட்டு பின்னர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
பின்பு மண்டல அலுவலர் பிரேம்நாத் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் போலீஸாரின் உதவியுடன் நேற்று மாலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் நட்சத்திர ஓட்டலின் முகப்பு மற்றும் ராட்சத செயற்கை நீரூற்றை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினார்கள். அந்த நேரத்தில் ஹோட்டலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு ஹோட்டலைச் சுற்றியும் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்றிரவு 8 மணி வரை நீடித்தது. இந்த ஹோட்டலில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
பூங்கா அமைக்க முடிவு-மேயர்:
இது குறித்து சென்னை மாநகர மேயர் சுப்பிரமணியன் கூறுகையில்,
தி பார்க் ஹோட்டல் நிர்வாகம் மாநகராட்சிக்கு சொந்தமான 21,140 சதுரஅடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 20 கோடி. இங்கு ஆக்கிரமிப்பை அகற்றி முடிந்ததும், அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் அழகான பூங்கா கட்டப்படும். இதுபோல மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications