படிப்பைத் தொடர லண்டன் திரும்பினார் பிலாவல்
துபாய்: மறைந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தனது படிப்பை தொடர்வதற்காக துபாயில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.
2007 டிசம்பர் மாதம் 27ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு திரும்பிய போது தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
பெனாசிரின் இறுதிச் சடங்கில் அவருடைய மகன் பிலாவல் பூட்டோ (19), மகள்கள் பக்தாவர் (17), ஆசிபா (14) ஆகியோர் கலந்து கொண்ட பின்னர் கடந்த 1ம் தேதி துபாய் திரும்பினர்.
அங்கு எமிரேட்ஸ் மலைப்பகுதியில் உள்ள பெனாசிரின் வீட்டில் மறைந்த பெனாசிருக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிலாவல் மற்றும் அவரது சகோதரிகளுக்கு ஆறுதல் கூறினர்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவரும் பிலாவல் பூட்டோ, தனது செமஸ்டர் தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் தனது படிப்பை தொடர துபாயில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.
பெனாசிரின் மறைவுக்குப் பின்னர் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக அவரின் மகன் பிலாவல் பூட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications