நியூ ஹாம்ப்ஷயர் வாக்கெடுப்பில் ஹில்லாரி வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தற்போது அங்கு மாகாண வாக்கெடுப்பு நடந்து வருகிறது. அனைத்து மாகாணங்களிலும் நடத்தப்படும் வாக்கெடுப்பில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே அந்தந்த கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.
முதலில் அயோவா மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஹில்லாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார். கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஓபாமா வெற்றி பெற்றார். இதனால் அமெரிக்கர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பல மாகாணங்களிலும் ஹில்லாரிக்கு ஆதரவு குறைந்து வருவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில் நியூ ஹாம்ப்ஷயரில் வாக்கெடுப்பு நடந்தது. இதிலும் ஓபாமாவே வெல்வார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால் எதிர்பாராதவிதமாக ஹில்லாரி ஜெயித்து விட்டார். இந்த வாக்கெடுப்பில் ஹில்லாரிக்கு 40 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஓபாமாவுக்கு 36 சதவீத வாக்குகளும், ஜான் எட்வர்ஸுக்கு 17 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
இந்த வெற்றி ஹில்லாரி ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது வெற்றியை ஜனநாயக்க கட்சி ஆதரவாளர்களிடையே கொண்டாடிய ஹில்லாரி பேசுகையில், ஈராக் போரை சரியான திசையில் முடிவுக்கு கொண்டு வர அனைவரும் இணைந்து பாடுபடுவோம். நாட்டின் பெருமையை, மதிப்பை திரும்பக் கொண்டு வர உழைப்போம் என்று அறைகூவல் விடுத்தார்.












Click it and Unblock the Notifications