மோடிக்கு கருப்புக் கொடி: தமுமுக
சென்னை: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இடம் பெற்றுள்ள பாசிச எதிர்ப்பு முன்னணி என்ற புதிய அமைப்பு உருவாகியுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சென்னைக்கு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமுமுகவின் முயற்சியால் உருவாகியுள்ள இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த ஜவாஹிருல்லா பேசுகையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விருந்துக்கு அழைத்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மோடி வருகிற 16ம் தேதி சென்னைக்கு வருகிறார். அன்றைய தினம் காமராசர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார். அவரது நிகழ்ச்சிக்கு காமராஜர் அரங்கத்தை காங்கிரஸ் கட்சி வழங்கக் கூடாது.
மோடி நிகழ்ச்சிக்கு வரும்போது காமராஜர் அரங்கத்தை பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில் முற்றுகையிட்டு, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம் என்றார் ஜவாஹிருல்லா.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications