நிமிட்ஸை தாக்கினால் .. ஈரானுக்கு புஷ் எச்சரிக்கை
ஜெருசேலம்: அமெரிக்க அணு சக்தி போர் கப்பல் நிமிட்ஸை தாக்கினால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் எச்சரித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னால் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் நிமிட்ஸ் ஈரான் கடற்பகுதியில் சென்றது. அப்போது ஈரான் நாட்டு கடற்படை படகுகள் அந்த கப்பலை வழிமறித்து தங்கள் நாட்டு எல்லைக்குள் செல்வதாக எச்சரிக்கை விடுத்ததுடன், மேலும் தொடர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
ஆனால் அமெரிக்க அதிகாரிகளோ நாங்கள் சர்வதேச கடற்பகுதியில் தான் சென்று கொண்டிருக்கிறோம், இதை தடுக்க ஈரானுக்கு உரிமை கிடையாது எனக் கூறி தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டனர்.
ஈரானின் இந்த செயலுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரான் தேவையில்லாமல் எங்கள் கப்பலை மிரட்டி உள்ளது. இதை நாங்கள் பெரிய விஷயமாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் கடற்படையினர் எங்கள் கப்பலை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று எச்சரிக்கிறேன் என்றார் புஷ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications