எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: ராமாவரம் தோட்டம் செல்லும் ஜெ.!

சென்னைக்கு அருகே, போரூர் செல்லும் வழியில், உள்ள ராமாவரத்தில்தான் எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் உள்ளது. அதிமுகவினரிடையே தோட்டம் என்று இதற்கு செல்லப் பெயர் உண்டு.
அந்த தோட்ட இல்லத்திற்கு ஜெயலலிதா இதுவரை ஒரே ஒருமுறைதான் சென்றுள்ளார். எம்.ஜி.ஆர். இறந்தபோது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் அவர் அங்கு போனதே இல்லை.
இந் நிலையில் வருகிற 17ம் தேதி எம்.ஜி.ஆரிந் 91வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி ராமாவரம் தோட்டத்தில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா கலந்து கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் 91வது பிறந்த நாளாகிய 17.1.2008 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவித்து 91வது பிறந்த நாள் விழா மலரை வெளியிட உள்ளார்.
மருத்துவ அணியின் சார்பில் தலைமை கழக வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை அவர் தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயிலில் கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டினை திறந்து வைக்கிறார்.
அதன் பின் டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காதுகேளாதோர் இல்ல மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஜெயலலிதா பரிசுகளை வழங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ராமாவரம் தோட்ட இல்லம் கவனிப்பாரின்றி போய் விட்டது. எத்தனையோ பேரின் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி வைத்த அந்த இல்லம் இன்று கவனிப்பாரின்றி கிடக்கிறது.
இதை சீரமைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆட்சியில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் பெயரைச் சொல்லி விஜய்காந்த், சரத்குமார் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், விஜய்காந்துக்கு எம்ஜிஆர் அபிமானிகள் இடையே நல்ல ஆதரவும் கிடைக்க ஆரம்பித்துள்ள நிலையில் தான் அந்த தோட்டத்திற்கு ஜெயலலிதா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications