ரஜினியின் வாக்கு பலிக்கும்-கருணாநிதி

சிவாஜி பட வெள்ளி விழாவில் கருணாநிதி பேசியதாவது,
ரஜினியன் படங்கள் பெரும் வெற்றி பெற்று அதற்கு விழாக்கள் கொண்டாடுகிற போதெல்லாம் நான் தவறாமல் அந்த விழாக்களில் கலந்து கொள்கிற வாய்ப்பை பெறுகின்றேன்.
இந்த வாய்ப்பு அடிக்கடி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ரஜினி ரசிகர்களுக்கு இந்த வேண்டுகோள் உற்சாகமாக இருக்கும்.
அவரது படம் அடிக்கடி வெளிவந்தால் எவ்வளவு மகிழ்ச்சி, உற்சாகம் அடைவீர்கள் என்று எனக்கு தெரியும்.
முன்பெல்லாம் நான் ரஜினியை பார்க்கும் போது புதிய பட முயற்சி மேற்கொள்ளவில்லையா? அடுத்த படம் எப்போது? என்ன கதை என்று கேட்பதுண்டு. அப்போதெல்லாம் அவர் எப்படி பேசாமல் இருப்பதன் மூலமாக இன்றைக்கும் பல விஷயங்களை உணர்த்துகிறாரோ, அதைப் போலவே பேசாமல் இருந்து சிரித்துக் கொண்டு போய்விடுவார்.
இப்போது தான் எனக்கு புரிகிறது, கொடுத்தால் பிரமாண்டமான வெற்றிப்படமாக தருவது, சாதாரண படம், படங்கள் வந்தது அதில் ஒன்று இந்த படம் என்ற அளவில் இருக்க கூடாது என்று கருதுகின்றவர்.
ரஜினி பேசும்போது தனது வெற்றிகளுக்கான காரணத்தை, ரகசியத்தை வெளியிட்டார்.
கபிலருடைய தத்துவத்தை எடுத்துக் கூறி, ஆசைப்படு, அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பலரை சேர்த்துக்கொள், பின் அந்த வெற்றியை நிறைவேற்றிக்கொண்டு அதில் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு கொடு என்றார்.
நான் அதை இப்போது புரிந்து கொண்டேன். நான் ஆசைப்பட வேண்டும். ஆசை நிறைவேற மற்றவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நினைத்ததை முடிக்க வேண்டும்.
உண்மை தான். ஆசைப்படுவதில் தவறில்லை. ஆசையை துறந்திடு என்று அந்தக் காலத்திலே துறவிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் திருவோடு இல்லாமல் எந்த துறவியும் இருந்ததில்லை. திருவோடு மீது அவர்களுக்கு ஆசை.
புத்தர் கூட ஆசையை துறந்து அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்த பிறகும் அவர் ஆசைப்பட்டார். ஆசைப்படாதீர்கள் என்ற கருத்தை கூறி மக்களை திருத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதுவும் ஒரு ஆசை தான். அதுபோலத் தான் ரஜினி நல்ல படங்களை தரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்u
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications