விஜய்காந்த் மீது சரத் மறைமுக தாக்குதல்
சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் குறிக்கோள் அம்பு அல்ல, அது செல்லும் இலக்குதான் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மலேசியாவில் படப்பிடிப்பின்போது காலில் அடிபட்டு சென்னை திரும்பிய சரத்குமார் தனது இல்லத்தில் கூடிய தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது,
என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற நினைக்கிறார்கள். அதனால்தான் நான் படித்த லயோலா கல்லூரி மூலம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளனர். காசு கொடுத்தால் யார் எப்படி வேண்டுமானாலும் கருத்துக் கணிப்பு வெளியிடலாம். (இந்த கருத்துக் கணிப்பில் விஜய்காந்த்தின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது)
மதுரையில் நடக்கவுள்ள எங்கள் கட்சி மாநாட்டை சிறப்பாக நடத்த அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். தேர்தலில் யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள்.
கூட்டணி வேண்டாம் என்று ஆரம்பத்தில் சொன்ன விஜயகாந்த் இப்போது கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். என்னை பொறுத்தவரை கூட்டணி தேவையில்லை. நாம் பல கூட்டணிகளை உடைக்கும் கட்சி. மற்ற கட்சிகளைப் போல ஒரு இடத்தில் வெற்றி பெறும் கட்சி அல்ல. (விருதாசலத்தில் மட்டும் விஜய்காந்த் கட்சி வென்றதை நினைவுகூர்க) தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் கட்சி.
மதுரையில் நடக்கும் நம் கட்சி மாநாட்டில் 50 லட்சம் பேர் திரள்வார்கள். நம் கட்சியில் நிர்வாகிகள் பதவி எந்த நேரத்திலும் மாறலாம். எனவே, கட்சிப் பணிகளில் தொண்டர்கள் தீவிரம் காட்ட வேண்டும்.
2011ல் சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. நமது குறிக்கோள் அம்பு அல்ல. அது செல்லும் இலக்குதான்.
அருகில் இருந்து சீண்டுவோரை கண்டுகொள்ளக் கூடாது. எனவே நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். அப்போதுதான் நம் குறிக்கோள் நிறைவேறும் என்றார் சரத்குமார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications