ஆசிரியர் அடித்ததால் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த மாணவர்
நெல்லை: புத்தகம் கொண்டு வராததால் ஆசிரியர் தாக்கியதில் ரத்த காயம் ஏற்பட்டதால், தன்னை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆரைக்குளத்தை சேர்ந்த முருகனின் மகன் ஆனந்த் (13). இவன் மேலப்பாளையத்தில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். முருகன் பாஜக பிரமுகராவார்.
2 நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற ஆனந்த புத்தகம் கொண்டு செல்லாததால், ஆரிசியர் மாணிக்கராஜ் ஆனந்தை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் நிலைதடுமாறிய அவன் ஜன்னலில் மோதி கீழே விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த ஆனந்தை பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து, பின்னர் பள்ளி வேனில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் பெற்றோரிடம் ஆனந்த், ஆசிரியர் அடித்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்தான். இதுகுறித்து பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு அவன் விளையாடும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் மாணவர் ஆனந்த் தன் பெற்றோருடன் சென்று நெல்லை மாநகர கமிஷனர் மஞ்சுநாதாவை சந்தித்து தன்னை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு கொடுத்தான். இது தொடர்பாக விசாரணை நடத்த மேலப்பாளையம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
கண்டித்த ஆசிரியர் மீது மாணவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications