ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனையுடன் அனுமதி-மத உணர்வு: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.
காளைகளை கொடுமைப்படுத்துவதாகக் கூறி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தடையை மீறி பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன.
பல இடங்களில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்தன. ஜல்லிக்கட்டுக்கு பேர் போன அலங்காநல்லூரில் நேற்று பொங்கல் விழா கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும், மக்களின் மத நம்பிக்கைகளுக்கு இடையூறு விளையும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டு, தடையை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், பஞ்சால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்தனர்.
மத உணர்வுகளை இழுப்பதா:
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது, 11ம் தேதி வழங்கிய தீர்ப்பை மாற்றி ஜல்லிக்கட்டுக்கு விதிக்க தடையை நீக்க தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில் (சேது சமுத்திரத் திட்டம்) தமிழக அரசின் நிலை என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளது என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் கொகாடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து விதிமுறைகள் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் பட்சத்தில் இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாடுகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து தான் வர வேண்டும்.
காளைகள், பார்வையாளர்கள் காயமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவோர் 3 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடந்த பின் 2 வாரங்களில் கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
வெளிநாட்டுப் பெண் போராட்டம்:
இதற்கிடையே கோவையில் வெளிநாட்டு பெண் ஒருவர் காந்தி சிலையின் கண்களை கறுப்பு துணியால் மூடியபடி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்.
பீட்டா விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ஒரு வெளிநாட்டு பெண் காந்தி பார்க்குக்கு வந்து காந்தி சிலையின் கண்கள் மீது கறுப்பு துணியை கட்டி விட்டு, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்குமாறு கோஷமிட்டுவிட்டு சென்று விட்டார்.
இது குறித்து ரொம்ப லேட்டாக கேள்விப்பட்ட போலீசார் ஓடி வந்தனர். அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர். இச் சம்பவத்தையடுத்து மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications