துபாயில் கன மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு
துபாய்: துபாயில் பெய்த கன மழையால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் பெய்த இந்த மழை நீர் அகல வடிகால் வசதிகள் இல்லாததால் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவைச் சேர்ந்தோர் தான் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் வேலை செய்யவில்லை.
மழையால் அதிக அளவில் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகனங்களை மெதுவாக ஓட்டுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
போக்குவரத்து நிலவரம் மற்றும் பிற தகவல்களை அறிய அவசர சேவை எண்ணை பலர் தொடர்பு கொள்கின்றனர். இதைத் தவிர்க்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications