பெட்ரோல் ரூ. 2.50, டீசல் ரூ. 1.50 உயர்கிறது

டெல்லி: பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது குறித்து நேற்று மாலை டெல்லியில் நடந்த முக்கிய கூட்டத்தில் சில அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து விலை உயர்வு குறித்து முடிவேதும் எடுக்காமல் கூட்டம் கலைந்தது. நாளையோ அல்லது மறுநாளோ விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த குழு டெல்லியில் கூடியது.
ஆனால், இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் வேறு முக்கிய பணிகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். நாளையோ அல்லது மறுநாளோ முடிவு எடுக்கப்படும் என்றார்.
கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பெருமளவில் உயர்ந்துவிட்டதால், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களுக்கு இதுவரை ரூ. 71,808 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தங்களது நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4ம், டீசல் விலையை ரூ. 2ம், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 40ம் உயர்த்த வேண்டும் என பெட்ரோலிய நிறுவனங்கள் கோரி வருகின்றன.
ஆனால், இந்த அளவுக்கு விலையை உயர்த்தினால் கடும் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2 முதல் 2.50 வரையும், டீசல் விலையை ரூ. 1 முதல் ரூ. 1.50 வரையும் உயர்த்துவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 20 வரை உயர்த்த மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications