காஸ் விலை உயர்வு: சென்னையில் டீ கடைகள் ஸ்டிரைக்

சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கம் இந்த ஸ்டிரைக்குக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஸ்டிரைக் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீ கடைகள் மூடப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான டீ கடைகளை கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டிரைக் குறித்து சங்கத் தலைவர் தாமோதரன் கூறுகையில், வர்த்தக ரீதியிலான சிலிண்டர்களுக்கு குறைந்த விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். கடந்த 6 மாதங்களில் வர்த்தக சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் எங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 840க்கு விற்ற சிலிண்டர் தற்போது ரூ. 1160 ஆக உயர்ந்துள்ளது.
வர்த்தக சிலிண்டர்களின் விலையை கடுமையாக உயர்த்தி, வீடுகளுக்கான சிலிண்டர்களின் விலையை தொடர்ந்து மானிய விலைக்கே விற்க எண்ணை நிறுவனங்கள் முயற்சிக்கின்றன என்றார் அவர்.
ஆனால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களைத்தான் பிளாக் மார்க்கெட்டில் வாங்கி டீக் கடைகள் பயன்படுத்துகின்றனவே என்ற கேள்விக்கு தாமோதரன் பதிலளிக்கையில், 3 மாதங்களுக்கு முன்பு வரை அப்படித்தான் இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தற்போது அப்படி யாரும் செய்வதில்லை.
சென்னை நகரில் 15 ஆயிரம் டீ கடைகள் உள்ளன. இதில் 60 சதவீத கடைகளின் உரிமையாளர்கள் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களைத்தான் பயன்படுத்துகின்றனர் என்றார்.
ஆனால் தாமோதரன் சொல்வதில் சிறிதளவே உண்மை உள்ளது என்பதை டீக் கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களைப் பார்த்தாலே புரியும். வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் அளவு 19 கிலோ ஆகும். ஆனால் பெரும்பாலான கடைகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் அளவு 14.2 கிலோ ஆகும். டீ கடைகளில் இந்த சிலிண்டர்களைத்தான் அதிகம் காண முடியும்.
டீ கடைகள் என்றில்லாமல் ஹோட்டல்களிலும் கூட வீடுகளுக்கான சிலிண்டர்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக சென்னை நகரில் சிலிண்டருக்குப் பதிவு செய்தால் குறைந்தது 10 நாட்களாவது காத்திருக்க வேண்டியுள்ளது
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications