சென்னையில் 7 இடங்களுக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 7 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடக்கப் போவதாக அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் பெயரில் பிரபல வணிக வளாக அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை, மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல வணிக அலுவலகமான சிட்டி சென்டரின் நிர்வாக அலுவலகத்துக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது.
அதில், சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், அப்பல்லோ மருத்துவமனை, தி.நகர் நியூ சரவணா ஸ்டோர், மயிலாப்பூர் சிட்டி சென்டர், வடபழனி முருகன் கோவில் மற்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் வரும் 21ம் தேதிக்குள் மனித வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த அல்-கொய்தா இயக்கம் முடிவு செய்துள்ளது எனவும், இந்த கடிதத்தின் நகலை டிஜிபியிடம் கொடுக்கவும் என எழுதப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிட்டி சென்டர் நிர்வாகத்தினர் மைலாப்பூர் காவல் நிலையத்தில் அந்த மர்ம கடிதத்தை ஒப்படைத்தனர்.
இந்த கடிதத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்ற மர்ம மிரட்டல் கடிதம் மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை நடத்தினர்.
மைலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் போட்டி காரணமாக இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
மிரட்டல் விடுக்கப்பட்ட 7 இடங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications