வெடிகுண்டு மிரட்டல்-மூடப்பட்ட உலக வங்கி
வாஷிங்டன்: வாஷிங்டனில் உள்ள உலக வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அது மூடப்பட்டது.
வாஷிங்டனில் உலக வங்கி அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து உலக வங்கியின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் அனைத்து கிளை அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
வெள்ளை மாளிகை வளாகத்தின் ஒரு பகுதியில்தான் உலக வங்கியின் அலுவலகம் உள்ளது. இங்கு 8000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இருப்பினும் உலக வங்கியின் கிளை அமைப்பான சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்), தனது அலுவலகத்ைத மூடவில்லை. அதேசமயம், ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டலால் வாஷிங்டனில் பெரும் பரபரப்பு நிலவியது.
--












Click it and Unblock the Notifications