எல்லாவற்றிலும் பிரச்சினை செய்யும் கேரளா - துரைமுருகன் பாய்ச்சல்
கோவை: தமிழகம் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் கேரள அரசு தேவையில்லாமல் வீண் பிடிவாதம் பிடித்து, பிரச்சினை செய்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தைப் பொறுத்தவரை, கேரள அரசு, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட (பி.ஏ.பி) ஒப்பந்தப்படி கேரள எல்லையில் இடைமலையாறு கட்டப்பட்டால் தமிழக எல்லைக்குள் ஆனைமலையாறு, நல்லாறு கட்டிக்கொள்ளலாம், நல்லாற்றில் இரண்டரை டி.எம்.சி தண்ணீர் நிரப்பிக் கொள்ளலாம் என ஷரத்து உள்ளது.
ஆனால் எல்லாவற்றையும் போல, இந்த விஷயத்திலும் கேரள அரசு வீண் பிடிவாதம் பிடிக்கிறது.
மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.3,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பங்கு நிதி, குளங்களை தூர் வார ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை வைத்துக் கொண்டு மாநகர எல்லைக்குள் உள்ள 7 குளங்களையும் தூர் வாரி சீர்படுத்த கோவை மாநகராட்சி அனுமதி கேட்கிறது. ஆனால் குளங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அத்துடன் தூர் வாரி சீரமைக்கும் திறமை படைத்த என்ஜீனியர்கள் பொதுப்பணித்துறையில் உள்ளனர். எனவே குளங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடியாது.
மத்திய அரசு ஒதுக்கிய நிதியை அவர்கள் எங்களிடம் கொடுத்தால் குளங்களை தூர் வாரி சீரமைத்து கொடுக்க தயாராக உள்ளோம் என்றார் துரைமுருகன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications