பில்கிஸ் கற்பழிப்பு வழக்கு: 11 பேருக்கு ஆயுள்

மும்பை: குஜராத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாக கற்பழித்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை படுகொலை செய்த பரபரப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும் வன்முறை வெடித்தது. முஸ்லீம்கள் குறி வைத்து கொன்று குவிக்கப்பட்டனர்.
அதில் ஒரு கொடூர சம்பவமாக, தஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 6 மாத கர்ப்பிணிப் பெண்ணை பெரும் கும்பல் சேர்ந்து கொடூரமாக கற்பழித்தது. பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதுதவிர பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களும் வெறிக் கும்பலின் கொடூர கற்பழிப்புக்கு ஆளானார்கள்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த வழக்கு குஜராத்தில் முதலில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் விசாரணையில் நியாயம் கிடைக்காது. எனவே வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரி பானுவின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு வழக்கை மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு பானு வழக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 18ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இன்று குற்றவாளிகளுக்கு நீதிபதி யு.டி. சால்வி தண்டனை விவரத்தை அறிவித்தார்.
கொடூரமாக கற்பழித்தது, கொலை ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
12வது குற்றவாளியான சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications