நான் தான் உண்மையான 'புரட்சித் தலைவி'-மாயாவதி
டெல்லி: இந்தியாவிலேயே நான் தான் உண்மையான பெண் அரசியல் தலைவி. மற்ற பெண் அரசியல்வாதிகள் எல்லாம் வெறும் வாரிசுகள் தான் என உத்தரப் பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவியுமான மாயாவதி தனது சுய சரிதையில் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தனது 52வது பிறந்த நாளையொட்டி இந்த புத்தகத்தை மாயாவதி வெளியிட்டார். அதில் மாயாவதி கூறியிருப்பதாவது
இளம் வயதில் சமூகப் புரட்சிக்காக நான் பெரும் பாடுபட்டேன். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை உயர அயராமல் உழைத்து வருகிறேன். 21ம் நூற்றாண்டில் நானும் பகுஜன் சமாஜ் கட்சியும் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளோம்.
என்னை ஒழிக்க நினைத்த அரசியல் சக்திகளை முறியடித்துத் தான் இந்த நிலையை அடைந்துள்ளேன்.
இப்போது இந்திய அரசியலில் உள்ள முக்கியமான பெண்கள் அனைவருமே வாரிசுகள் தான். தங்கள் குடும்பம் மூலமாக கிடைத்த அரசியல் சக்தியை அனுபவித்து வருபவர்கள் தான். இவர்களுடன் என்னைப் போன்ற புரட்சிவாதிகளை ஒப்பிடக் கூடாது.
சமூகப் புரட்சியில் ஈடுபட்டுள்ள நானும் அவர்களும் ஒன்றல்ல. நடுநிலை மனதோடு நான் சொல்வதை நீங்கள் கேட்டால் நான் சொல்வதன் நியாயம் புரியும். ஒடுக்கப்பட்ட மக்களை சமூகக் கேடுகள், துரோகங்களில் இருந்து விடுவிக்க நான் ஒரு வரலாற்றை எழுதி (படைத்து) வருகிறேன்.
காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி ஆகிய எல்லா கட்சிகளும் ஒன்று தான். அவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் நோக்கமோ சிந்தனையோ துளியும் கிடையாது. தலித் ஓட்டுக்கள் மீது மட்டுமே கண் வைத்துள்ள கட்சிகள் இவை.
நான் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த காலத்திலும் கூட அக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதோ, அவர்களது அதிகாரத்துக்கு தலை வணங்கியதோ கிடையாது. அவர்களது ஆதரவுடன் ஆட்சியில் இருந்தாலும் அவர்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைத்திருந்தேன் என்று கூறியுள்ள மாயாவதி தனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களை விலாவாரியாக குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications