புலிகளுக்கு உதவும் சிங்களர்கள்!
கொழும்பு: பணம் பெற்றுக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு சிங்களர்கள் சிலர் உதவி வருவதாக இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே கூறியுள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்து வருகிறது. தினசரி குறைந்தது 30-40 பேர் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தென் பகுதியில் பல்வேறு தொடர் குண்டுவெடிப்புகள் நடந்து வருகின்றன. இதில் பலர் பலியாகி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு சிங்களர்கள் சிலர் அவர்களுக்கு உதவி செய்து வருவதாக பிரமதர் விக்கிரமநாயகே குற்றம் சாட்டியுள்ளார்.
இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு அருகே உள்ள ஹொரனா என்ற இடத்தில் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் மத்தியில் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு சிங்களர்கள் சிலரே நாட்டைக் காட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது கடும் கண்டனத்துக்குரியது. புலிகளுக்கு உதவியாக இருக்கும் சிங்களர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக தங்களது தேச துரோக செயலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் வடக்கில் வசிக்கும் தமிழர்கள், சிங்களர்களுக்கு எதிரிகள் இல்லை, நண்பர்கள்தான். அவர்களும் விடுதலைப் புலிகளால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காகத்தான் ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது என்றார் விக்கிரமநாயகே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications