சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் மீது அவமதிப்பு வழக்கு
மதுரை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை பேரையூர் சுப்புலாபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட போலீஸ் எஸ்ஐக்கான பணித் தேர்வில் கலந்து கொண்டேன்.
உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் 72 மதிப் பெண்கள் பெற்ற தாழ்தப்பட்ட வகுப்பினர் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
நான், போதிய மதிப்பெண்கள் பெற்ற போதிலும் என்னை மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கவில்லை. எனவே என்னை மருத்துவ தேர்வுக்கு அனுமதிக்க கோரி உத்திரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தேன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்னை மருத்துவ தேர்வுக்கு அழைக்க உத்திரவிட்டார். ஆனால் நீதிபதி உத்தரவுக்கு பின்னும் இதுவரை என்னை மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கவில்லை.
ஆனால் என்னுடன் நேர்காணல் தேர்வில் பங்கேற்ற பலருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
ஐகோர்ட் உத்திரவை சீருடை பணியாளார் தேர்வாணயம் மதிக்கவில்லை. எனக்கான பணி வாய்ப்பு பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே ஐகோர்ட் உத்திரவை மதிக்காத சீருடை பணியாளார் தேர்வாணய தலைவர் சுக்லா மீது கோர்ட் அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் தற்போதைய எஸ்ஐ பணியிடத்தில் ஒரு சீட் காலியாக வைக்க உத்திரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோகன்ராம் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் சுக்லாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்டார். மேலும் மறு உத்தரவு வரும் வரை ஒரு எஸ்ஐ பணியிடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications