சென்னை விமான நிலைய விரிவாக்கம்: மக்கள் முற்றுகைப் போராட்டம்
சென்னை: சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு கைவிட வேண்டும் என்று கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் தற்போது வரும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஓடுபாதையை விரிவுபடுத்த வேண்டும் என்றால் சுற்றி குடியிருப்பு பகுதிகளாக அமைந்து விட்டபடியால் அரசால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கம், கோலப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கோவூர் ஆகிய பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி அங்கு விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்து நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாழ்வுரிமை அமைப்பு சார்பாக அப்பகுதியை சேர்ந்த 300 பெண்கள் உட்பட 500 பேர் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
விமான நிலைய விரிவாக்கம் குறித்த திட்டத்தை அரசு மறு பரீசலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதற்கான மனுவை அந்த அமைப்பின் தலைவர் பிருந்தா, மாவட்ட கலெக்டர் சந்தோஷ் மிஸ்ராவிடம் கொடுத்தார்.
இந்தத் திட்டத்தால், போரூர், மதனாந்தபுரம், முகலிவாக்கம், மெளலிவாக்கம், பனிச்சேரி, கோவூர், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர், கெளல் பஜார், மணப்பாக்கம் பகுதிகளில் மக்கள் யாரும் வசிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications