பிப்ரவரி 1 வரை சட்டசபை கூட்டத் தொடர்
சென்னை: தமிழக சட்டசபை இன்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்கியது.
ஆளுநரின் உரை முடிந்தவுடன் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் பன்னீர்செல்வம், பாமக சார்பில் ஜி.கே. மணி, காங்கிரஸ் சார்பில் சுதர்சனமும், தேமுதிக சார்பில் விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் கூட்டத் தொடரை பிப்ரவரி 1ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், இந்த கூட்டத்தொடரில் திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பது உள்பட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன என்றார்.
கடந்த கூட்டத்தொடரில் சபை காவலரின் தொப்பியை சபாநாயகர் மீது வீசிய அதிமுக எம்.எல்.ஏ. போஸ் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பற்றியும், ஜெயலலிதா மீதான உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து வந்த சம்மன் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சபாநாயகரிடம் கேட்டபோது,
கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடியாது. நீதிமன்ற உத்தரவு சபை நடவடிக்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. ஜெயலலிதா மீதான உரிமைப்பிரச்சினை குறித்த சம்மன் தொடர்பாக உரிமைக்குழுதான் முடிவு செய்யும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications