வட சென்னை புறக்கணிக்கப்படுகிறது-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சென்னை: பல வகையில் வட சென்னை புறக்கணிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
வட சென்னையில் அக் கட்சியின் சார்பில் நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்தில் வரதராஜன் பேசியதாவது,
வியாசர்பாடி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் முளைத்து விட்டன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வழியை தினமும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்குள்ள பாலத்தை கடப்பதற்கு பல மணி நேரத்தை மக்கள் செலவிட வேண்டியிருக்கிறது.
அலுவலக வேலைக்கு செல்பவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். லேசாக மழை பெய்துவிட்டாலே இந்தப் பகுதியில் இடுப்பு வரை மழை நீர் தேங்குகிறது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக 10 மேம்பாலங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அதில் 9 பாலங்கள், கட்டி முடிக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. அவை எல்லாமே தென் சென்னை பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் தான்.
இங்கே (வடசென்னை) அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ஒரே பாலம் மட்டும் 10 வருடம் ஆகியும் வேலை முடியாமல் அப்படியே நிற்கிறது.
பாலம் விஷயத்தில் மட்டுமல்ல. வட சென்னை பலவகையிலும் புறக்கணிக்கப்படுகிறது. தென் சென்னை பகுதிகளுக்கு புத்தம் புதிய பேருந்துகள் விடப்படுகின்றன. ஆனால் வட சென்னையில் பழைய பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
சாலை, குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் என எல்லாவற்றிலும் வட சென்னை புறக்கணிக்கப்படுகிறது. இங்குள்ள பள்ளிகளின் நிலையும் மோசமாகவே உள்ளது.
தென் சென்னை மட்டும் வளர்கிறது. உழைக்கும் மக்கள் அதிகமாக வசிக்கும் வடசென்னை தேய்கிறது. இது ஆரோக்கியமான நிலைமை இல்லை என்றார் வரதராஜன்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications