சிங்கப்பூரில் தைப்பூசம் கோலாகலம்
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: தைப்பூசத் திருவிழா சிங்கப்பூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தைப்பூச விழா தமிழகத்தில் உள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மட்டுமின்றி உலகம முழுமையும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதே போல சிங்கப்பூரிலும் தைப்பூசத் திருவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செராங்கூன் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து 4.5 கிமீ தொலைவில் இருக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.
7,500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 400 பேர் காவடி, உடலில் அலகுகள் குத்திக் கொண்டும் முருகக் கடவுளை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications