கடலில் கண்ணிவெடிகள்-இலங்கை கடற்படையின் அட்டூழியம்
சென்னை: தமிழக-இலங்கை கடற்பகுதியில் டெல்ட் தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன.
வழக்கமாக எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களைத் தாக்குவதை இலங்கை கடற்படை வேலையா வைத்துள்ளது. அவ்வப்போது அவர்களை சுட்டுக் கொல்வதும் கைது செய்வதுமாக இலங்கையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் மீனவர்களை தடுக்க கடலில் கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவளத்துறை செயலாளர் லீனா நாயர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், இலங்கை கடற்படை நடுக்கடலில் புதைத்துள்ள கண்ணிவெடி பற்றி குறிப்பிட்டு, தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை மீன்வளத்துறை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் இலங்கை கடற்படை கண்ணிவெடிகளை அமைத்துள்ளதாக கூறும் டெல்ட் தீவு அருகே சென்று பார்வையிட்டுள்ளனர்.
மீனவர்களை மீட்க நடவடிக்கை:
இதற்கிடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் கருணாநிதி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 3 நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
இதனால் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்களிடையை பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட முதல்வர் கடும் அதிர்ச்சியடைந்து அவர்களை மீட்பது குறித்து தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உட்பட முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர் இலங்கையில் உள்ள இந்திய துணைத்தூதரை தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மீனவர்களை மீட்பது தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரையும், மத்திய அரசையும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் முதல்வரின் இந்த நடவடிக்கை உத்தரவை தொடர்ந்து வெகு விரைவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications