தேசியக் கொடிக்கு அவமானம்: சானியாவை விசாரிக்க கோர்ட் உத்தரவு
திருப்பதி: தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு திருப்பதி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சானியா மிர்ஸா, ஆஸ்திரேலியாவில் நடந்த ஹோப்மேன் கோப்பை டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டபோது தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் நடந்து கொண்டார். எனவே அவர் மீது தேசிய கெளரவச் சட்டம் 1971ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி குடும்பகா ரமேஷ் என்ற வழக்கறிஞர் திருப்பதி 3வது கூடுதல் மாவட்ட முன்சீப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணா, சானியா மிர்ஸா மீதான புகாரைப் பதிவு செய்து உரிய முறையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சித்தூர் மாவட்ட எஸ்.பி. சசிதர் ரெட்டிக்கு உத்தரவிட்டார்.
விசாரணை அறிக்கையை மார்ச் 18ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படியும் எஸ்.பிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications