இந்தியாவில் பிரான்ஸ் அதிபர்-கேர்ள் பிரண்டை விட்டுவிட்டு வந்தார்

டெல்லி: பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இன்று காலை டெல்லி வந்தார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
வழக்கமாக தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது தனது கேர்ள் பிரண்டான கார்லா புரூனியையும் அழைத்துக் கொண்டு வருவது நிக்கோலசின் வழக்கம். வழக்கமாக இந்தியா வரும் வெளிநாட்டு அதிபர்களின் மனைவிக்குத் தான் முதல் பெண்மணிக்கு உரிய மரியாதை வழங்கப்படும். அதிபர்களின் கேர்ள் பிரண்டுகளுக்கு எல்லாம் அந்த மரியாதையை இந்தியா தருவதில்லை.
ஆனால், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க வரும் நிக்கோலஸ் தனது கேர்ள் பிரண்டையும் கூட்டிக் கொண்டு வந்துவிட்டால் என்ன செய்வது என இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தன.
குடியரசு தின ராணுவ அணிவகுப்பை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பிரான்ஸ் அதிபரும் அமர்ந்து பார்க்கும்போது கேர்ள் பிரண்டுக்கு எந்த வரிசையில் சீட் தருவது என்று புரியாமல் திண்டாடி வந்தனர்.
இது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறையிடம் இந்தியாவின் சார்பில் லேசாக பேசிப் பார்க்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் நிலையை புரிந்து கொண்ட நிக்கோலஸ் தனது கேர்ள் பிரண்ட் கார்லாவை ஊரிலேயே விட்டுவிட்டு வந்து மத்திய அரசின் வயிற்றில் பாலை வார்த்துவிட்டார்.
இல்லாவிட்டால் மத்திய அரசு பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கும் வாய்ப்பு நிலவியது.
நிக்கோலஸ் சர்கோசியுடன் 50க்கும் மேற்பட்ட ெதாழிலபதிபர்களும் வந்துள்ளனர். அணு சக்தி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் முக்கிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ள உள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications