சென்னையில் ரூ.150 கோடியில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம்
திருச்சி: சென்னையில் ரூ. 150 கோடி செலவில் 50 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது.
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பழந்தமிழ் இசை மரபுகள் மற்றும் பண்டைய இசை மரபுகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு நடந்து வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கை மத்திய அரசின் செம்மொழி தமிழ் ஆய்வு மையமும், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியும் இணைந்து நடத்துகின்றன.
இதில் இந்தியா தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்தும் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய தமிழ் மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினர் டாக்டர் எம்.பி. பாலசுப்பிரமணியன் கூறுகையில்,
தமிழ் மொழி மேம்பாட்டு வாரியம் தமிழகத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், பயிலரங்கங்குகளை நடத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் பழமையான இசை, தமிழ் இசை தான்.
தமிழ் செம்மொழியாக்கப்பட வேண்டும் என கனவு கண்டார் பரிதிமாற் கலைஞர். முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சிகளின் காரணமாக மத்திய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது.
தமிழ் செம்மொழியாக்கப்பட்டால் என்ன பயன் கிடைக்கப்போகிறது என சிலர் கேட்கலாம். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை செம்மொழி தமிழுக்காக கோடி கோடியாக நிதி ஒதுக்குகிறது, அந்த நிதியில் இருந்து தான் இதுபோன்ற பன்னாட்டு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பு செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் தொடக்க விழா நடந்தது. அதில் பங்கேற்ற மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை மந்திரி அர்ஜுன் சிங்கிடம் மைசூரில் உள்ள மத்திய அரசின் செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை சென்னைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசு சென்னையில் இதற்காக சுமார் 50 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க முன் வந்தது. அந்த இடத்தில் ரூ.150 கோடியில் மத்திய அரசு தமிழ் ஆய்வு மையத்திற்கான புதிய கட்டிடங்களை கட்டித் தரவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications