தேர்தல் கமிஷனுக்கு எதிராக கடையடைப்பு!
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் தொகுதியை நாகப்பட்டிணம் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலங்கைமானில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
தேர்தல் ஆணையம் தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து வருகிறது. இதன்படி பல நாடாளுமன்ற தொகுதிகள் மாற்றம் செய்யப்ப்டடுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானை நன்னிலம் தொகுதியோடு இணைத்து, அதை நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதியுடன் தேர்தல் ஆணையம் இணைத்தது. இதற்கு திருவாரூர் மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த உத்தரவை வாபஸ் பெறக் கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
தேர்தல் கமிஷன் தனது உத்தரவை மறு பரிசீலனை செய்யவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என வணிகர்கள் அறித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications