புதுச்சேரியில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்-அனல் பறக்கிறது
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது போல, மிகச் சிறிய மாநிலமான புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஏகப்பட்ட கோஷ்டிகள் உண்டு. இருந்தாலும் பிரதானமாக இருப்பது முதல்வர் ரங்கசாமி மற்றும் முன்னாள் மாநிலத் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான நாராயணசாமியின் கோஷ்டிகள்தான்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
முதல்வர் ரங்கசாமி தலைமையில் வைத்தியலிங்கம், வல்சராஜ், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். கடந்த சில காலமாக இவர்கள் 5 பேருக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
ரங்கசாமியின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்துவரும் நாராயணசாமி இந்த அமைச்சர்களை ஒருங்கிணைத்து போட்டி அரசியல் நடத்தி வருகிறார்.
இந் நிலையில் புதுச்சேரியில் ரூ.250 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி துவங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான குழுவில் தங்களை நியமிக்கவில்லை என்று கூறி அமைச்சர்கள் அனைவரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் கூண்டோடு பெங்களூர் வந்த அவர்கள் புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளரை சந்தித்து முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து டெல்லிக்கும் சென்று முதல்வரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அமைச்சர்களின் இந்த செயலுக்கு நாராயணசாமி தான் என முடிவெடுத்த ரங்கசாமியின் ஆதரவாளர்கள் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் நாராயணசாமியின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து உருவ பொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாராயணசாமியின் ஆதரவாளர்கள் டிஜிபி கானை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதேபோல் அமைச்சர்களும், ஆளுநர் முகுத்மிதியை சந்தித்து உருவ பொம்மை எரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
இதைத் தொடர்ந்து நாராயணசாமியின் உருவ பொம்மையை எரித்த முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் 300 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சண்முகம் கூறியதாவது, கொடும்பாவி எரிப்பவர்கள் காங்கிஸ் கட்சிக்காரர்களே இல்லை. நான் வரும் 30ம் தேதி டெல்லி செல்ல உள்ளேன். கட்சி மேலிடம் கேட்டால் இங்குள்ள நிலவரம் குறித்து எடுத்துரைப்பேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications