நேபாளத்தின் ஒல்லிப் பெண் - பணம் கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்
காத்மாண்டு: நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியான ஈஸ்வரி மாயா சினால், அநாட்டிலேயே மிகவும் ஒல்லியான மற்றும் குள்ளமான பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார். அவரைப் பார்க்க தினசரி பெரும் கூட்டம் கூடுகிறதாம்.
நேபாள நாட்டின் டாங் மாவட்டத்தில் உள்ள சைலை கிராமத்தில் கடந்த 1991ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர் ஈஸ்வரி மாயா. இவருக்கு தற்போது 16 வயதாகிறது. இவரது உயரம் 28 இன்ச்சுகள்தான். எடையோ வெறும் 6 கிலோதான்.
நேபாளத்திலேயே இவர் தான் மிகவும் குள்ளமான மற்றும் ஒல்லியான பெண்.
இவர் குறித்த தகவல் நேபாளத்தில் வெகு வேகமாக பரவவே பிரபலமாகி விட்டார் ஈஸ்வரி. தற்போது மேற்கு நேபாளத்தில் உள்ள நேபாள்கஞ்ச் என்ற இடத்தில் தேசிய வர்த்த திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் ஈஸ்வரி ஒரு காட்சிப் பொருள் போல வைக்கப்பட்டுள்ளார்.
அவரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடுகிறது. அவரைப் பார்க்க தலைக்கு ரூ. 20 பணமும் வசூலிக்கிறார்கள்.
ஈஸ்வரி குறித்து அவரது தந்தை தன் பகதூர் சினால் கூறுகையில், ஈஸ்வரி பிறந்தபோது 200 கிராம் எடையுடன்தான் இருந்தாள். உலகிலேயே எனது மகள்தான் மிகவும் குள்ளமான மற்றும் எடை குறைவான பெண்.
நாட்டுப் புற பாட்டுக்கு நன்றாக நடனம் ஆடுவாள். அவளைப் பார்க்க வருகிறவர்கள் அன்பளிப்புகளையும் கொடுத்துச் செல்கின்றனர் என்றார் பகதூர்.
இதுவரை ஆயிரக்கணக்கான பேர் ஈஸ்வரியை பார்த்துச் சென்றுள்ளனராம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications