மகாத்மா காந்தியின் கடைசி அஸ்தி இன்று கரைப்பு
மும்பை: மகாத்மா காந்தியின் கடைசி அஸ்திக் கலசம் இன்று அரபிக் கடலில் கரைக்கப்படுகிறது.
மகாத்மா காந்தி, 1948ம் ஆண்டு, ஜனவரி 30ம் தேதி டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது 60வது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகள், நதிகளில் கரைக்கப்பட்டன. ஒரே ஒரு அஸ்திக் கலசம் மட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
அந்த அஸ்தியை 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அரபிக் கடலில் கரைக்கவுள்ளனர்.
இந்த அஸ்திக் கலசம், மகாத்மா காந்தி கடைசியாக வாழ்ந்த தெற்கு மும்பையில் உள்ள மணி பவனில் வைக்கப்பட்டுள்ளது.
கடலில் கரைக்கப்படவுள்ளதால் அஸ்திக் கலசத்திற்கு நேற்று ஏராளமான மாணவ, மாணவியர், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் திரண்டு வந்து கடைசி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா கொல்லப்பட்ட பின்னர் அவரது அஸ்தி, 1948ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆறுகள், கடல்களில் கரைக்கப்பட்டது. இருப்பினும் சில அஸ்திக் கலசங்களை கரைக்காமல் அவரது தீவிர ஆதரவாளர்கள் தங்களுடன் வைத்துக் கொண்டனர்.
அப்படி ஒரு அஸ்திக் கலசம் 1997ம் ஆண்டு புவனேஸ்வர் வங்கி ஒன்றின் லாக்கரில் இருந்தது. பின்னர் அது அலகாபாத்தில் கரைக்கப்பட்டது. இன்னொரு கலசம் மணி பவனில் இருந்தது. இதை பிரபல தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜின் பேரன் பரத் நாராயணன் என்பவர் மணி பவனில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications