நாலந்தா பல்கலை. போர்ட் மீட்டிங்கில் கலாம்
பாட்னா: சர்வதேச நாலந்தா பல்கலைக்கழகத்தின் முதல் போர்டு மீட்டிங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்கவுள்ளார்.
பீகார் மாநில அரசு நாலந்தா சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முதலாவது போர்டு கூட்டம் பிப்ரவரி 8ம் தேதி பாட்னாவில் நடைபெறுகிறது. இதில் கலாம் பங்கேற்கவுள்ளதாக மாநில மனித வள மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அஞ்சனி குமார் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பீகாரில் 2 நாள் பயணமாக கலாம் வருகை தரவுள்ளார்.
இந்த பயணத்தின்போது நாலந்தா பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை அவர் பார்வையிடுகிறார். பின்னர் 9 பேர் கொண்ட போர்டு மீட்டிங்கிலும் அவர் பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் குறித்த திட்ட விவாதத்திலும் அவர் பங்கேற்கிறார்.
போர்டு தலைவராக குடியரசுத் தலைவரின் முன்னாள் ஆலோசகர் ஒய்.எஸ்.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
நாலந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது முதலே அதுதொடர்பான ஆய்வுகள், ஆலோசனைகளில் டாக்டர் ராஜன் பங்கேற்று வருகிறார். இதுதொடர்பான மசோதாவை உருவாக்கவும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
பல்கலைக்கழக போர்டை உருவாக்க மாநில அரசு ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும் நிலம் வாங்குதவற்காக ரூ. 8.77 கோடி நிதியையும் மாநில அரசு ஒதுக்கியது என்றார் அவர்.
நாலந்தா பல்கலைக்கழகம் தொடர்பாக ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் இரு ஆய்வுக் கூட்டங்கள் நடந்துள்ளன. 3வது கூட்டம் சீனாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications