புலிகளை ஆதரித்துப் பேசினால் தவறில்லை-நெடுமாறன்

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது சட்டவிரோதமான செயல் அல்ல என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது குற்றச் செயல் அல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதற்காக ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் நிராகரித்து விட்டன.
விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவிப்பது குற்றச் செயல் அல்ல என்று உச்சநீதிமன்றமே தெளிவாக கூறி விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் இதை பெரும் பிரச்சினையாக்கி சட்டசபையில் விவாதம் நடத்தி வருவது தேவையற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருவதில் நியாயம் இல்லை.
இவர்களின் நெருக்குதலுக்குப் பணிந்து முதல்வர் கருணாநிதியும், புலிகளை ஆதரித்துப் பேசுவோரைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வரவும் தயார் என்று கூறியுள்ளார். இது ஜனநாயக விரோத செயல் என்பது தெள்ளத் தெளிவு என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications