கள்ளக்காதலனை கொன்ற பெண் கணவருடன் கைது
புதுச்சேரி: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்த பெண்ணையும், அவரது கணவரையும் புதுச்சேரி போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மனைவி மேரி. மேரிக்கும், தஞ்சையைச் சேர்ந்த சுப்ரமணி (32) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
சமீபத்தில் மேரி, சுப்ரமணியுடன் ஓடி விட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் மரியதாஸிடம் திரும்பி வந்தார். அவரும் மனைவியை மன்னித்து ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்தினார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சுப்ரமணி மேரியின் வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் பலத்த கத்திக் குத்து காயத்துடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களிடம், மேரியும், மரியதாஸும், சுப்ரமணி மேரியை தன்னுடன் வந்து வாழுமாறு வற்புறுத்தியதாகவும், அவர் மறுத்ததால் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் பிரேதப் பரிசோதனையின்போது சுப்ரமணியின் முதுகில் ஆழமான கத்திக் குத்து இருந்தது தெரிய வந்தது. இதனால் மேரி மற்றும் மரியதாஸ் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.
இருவரையும் முறைப்படி அவர்கள் விசாரித்தபோது தாங்கள் தான் சுப்ரமணியைக் கொன்றதாக ஒத்துக் கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications