காதல் கோட்டை பாணியில் காதலியை கரம் பிடித்த வாலிபர்
தூத்துக்குடி: காதல் கோட்டை சினிமா பாணியில் போனிலேயே பேசி காதலித்த பெண்ணை தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.
தூத்துக்குடி, முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜா (22). இவருடைய நண்பர் ஒருவர் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.
திருமணத்திற்கு பின்னர் தனது நண்பருடன் போனில் பேச முயன்ற போது தனது நண்பரின் மனைவியின் மூலம் அவரின் தோழியான ஷாலினி (22) என்பவரின் அறிமுகம் ராஜாவுக்கு கிடைத்துள்ளது.
ஷாலினி கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர். அவர் பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
முதல் முறை போனில் பேசும்போதே இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் காதல்கோட்டை சினிமா பாணியில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல் போனிலேயே பேசி காதலிக்க ஆரம்பித்தனர்.
காதல் முற்றிய நிலையில் கடந்த 21ம் தேதி கோவைக்கு வந்த ஜோசப்ராஜா தனது காதலி ஷாலினியுடன் தூத்துக்குடிக்கு திரும்பினார். பெற்றோரின் சம்மதத்தை பெற்ற ஜோசப் ராஜா தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் ஷாலினியுடன் சென்று இருவரும் காதலிப்பதை கூறியுள்ளார்.
பின்னர் போலீசார் இருவீட்டாரின் பெற்றோர்களை அழைத்து பேசியதில் இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இருவரையும் பெற்றோர்கள் அழைத்து சென்று ரிஜிஸ்டர் அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்து வைத்தனர்.
காலமெல்லாம் காதல் வாழ்க!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications