அணு ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய திறன் படைத்த காவ்ரி (ஹதீப்-5) நடுத்தர ரக ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.
இந்த ஏவுகணை 1300 கிலோமீட்டர் தூரம் வரை பாயக் கூடிய தன்மை படைத்ததாகும். கடந்த வெள்ளிக்கிழமைதான் 700 கிலோமீட்டர் தூரம் வரை பாயக் கூடிய ஷாஹீன் 1 ஏவுகணையை பாகிஸ்தான் ஏவி
பரிசோதித்தது.
இன்றைய ஏவுகணை சோதனையை அதிபர் பர்வேஸ் முஷாரப், ராணுவ தலைமைத் தளபதி பர்வேஸ் கயானி, மூத்த ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள் நேரில் பார்த்தனர்.
பின்னர் விஞ்ஞானிகளையும், ராணுவ அதிகாரிகளையும் முஷாரப் பாராட்டினார். பிறகு அவர் பேசுகையில், பாகிஸ்தான் சிறப்பான, வலுவான அணு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை திறம்பட சமாளிக்கும், முறியடிக்கும் திறன் தற்போது பாகிஸ்தானுக்குக் கிடைத்துள்ளது என்றார்.
1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடுத்தர ரக ஏவுகணைத் திட்டத்தை பரிசோதித்து வருகிறது பாகிஸ்தான். முதலில் காவ்ரி 1 ஏவி சோதிக்கப்பட்டது. அதையடுத்து ஷாஹீன், காஸ்னவி, அப்தாலி ஆகிய ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டன.
இந்த வரிசையில் ஹதீப் 6 (ஷாஹீன் 2) ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாயக் கூடிய நீண்ட தூர ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications