பெண்ணை எரித்து கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை
ராமநாதபுரம்: பெண்ணை எரித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே சாம்பகுளத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் அந்தமானில் கடை வைத்துள்ளார். இவர் சொந்த ஊருக்கு வந்த போது உறவுக்கார பெண் லதா என்பவரோடு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதனால் லதாவை திருமணம் செய்யக் கோரி அவரது தாயார், செல்வத்தை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால், இதை செல்வம் விரும்பவில்லை.
இந் நிலையில் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி லதாவை செல்வம் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். பின்னர் தனது நண்பர்கள் மங்களம், கருப்பையா ஆகியோருடன் சேர்ந்து லதாவை கழுத்தை நெரித்துக் கொன்றார்.
பின்னர் லதாவின் அடையாளம் யாருக்கும் தெரியாமல் இருக்க அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
லதா காணாமல் போனதால் விசாரணை நடத்திய போலீசார் இறுதியில் செல்வம், மங்களம், கருப்பையா ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இந்த கொலை உறுதியானது.
இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட செல்வம், கருப்பையா, மங்களம் ஆகியோருக்கு ஆயுள் தண்டணையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications